10 Jun 2017

டாக்டர் எம்பி பியெஸ்ஸூம், டாக்டர் எம்பாத பியெஸ்ஸூம்!


டாக்டர் எம்பி பியெஸ்ஸூம், டாக்டர் எம்பாத பியெஸ்ஸூம்!
            எல்லாரும் தங்கள் குழந்தைகளை டாக்டருக்குத்தான் படிக்க வைக்க விரும்புகிறார்கள். எல்லாரும் டாக்டராகி விட்டால்... நர்ஸ், லேப் டெக்னிஷியன், ஆபீஸ் அசிஸ்டென்ட், வார்ட் பாய்க்கு என்ன செய்வார்கள்? எல்லாரும் டாக்டராகி, அவரவர்கள் அவரவர்களுக்கு வைத்தியம் பார்த்துக் கொண்டால்... டாக்டரிடம் யார் வருவார்கள்?
            அதை விட முக்கியம் ஒரு நல்ல ஓவியன் டாக்டராவதும், ஒரு நல்ல இசைக் கலைஞன் டாக்டராவதும், ஒரு நல்ல கவிஞன் டாக்டராவதும் படைப்புத் துறைக்கு எவ்வளவு பெரிய இழப்பு.
            தொழில்கள் அனைத்தும் சரிநிகர் சமானம் என்று மதிக்கப்பட்டால் என்ன? எந்தத் தொழிலாக இருந்தாலும் அவர்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான ஊதியம் வழங்கப்பட்டால் என்ன?
            டாக்டர் போன்ற தொழில் புரிவோர்க்கு வாழ்வாதாரத்திற்கு அதிகமான ஊதியத்தை வழங்குவதும், வார்டு பாய் போன்றோர்க்கு வாழ்வாதாரத்திற்கு குறைவான ஊதியம் வழங்குவதும் படித்த ஒரு நாகரிக சமூகத்தின் அடையாளமாக தோன்றவில்லையே.
            படிக்காத பாமர சமூகத்தில் மிலுக்காக மேற்பார்வை செய்பவனுக்கு மிகை ஊதியமும், உடல் வருந்தி உழைப்பவனுக்குக் குறை ஊதியமும் வழங்கப்பட்ட நிலை, படித்த நாகரிக சமூகத்திலும் மாறவில்லை என்றால் எப்படி?
            வாழ்வாதாரத்திற்கு ஏற்ற ஊதியம் ஒவ்வொரு தொழிலாளிக்கும் வழங்கப்பட்டால் அவரவர்களுக்கும் தங்களின் மனதுக்கு உகந்த, தங்களின் பிள்ளைகளுக்குப் பிடித்தத் துறையிலேயே ஒவ்வொருவரும் படிக்க வைப்பர். அப்படி ஒரு நிலையை உருவாக்க வேண்டியது அரசாங்கத்தின் கையில் இருக்கிறது. அரசாங்கம் அப்படிப்பட்ட ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும். உருவாக்கி விட்டால் அந்த அரசாங்கத்தின் மீது அளப்பறிய பற்றோடு மக்கள் இருப்பர். அந்தச் சமூகத்தில் அரசுக்கு எதிரான கோஷங்களை மியூசியத்தில்தான் தேடிக் கண்டிபிடிக்க வேண்டியிருக்கும்.
*****

No comments:

Post a Comment

கதை எழுதுதலும் ஆத்மாவைக் கொல்லுதலும்

கதை எழுதுதலும் ஆத்மாவைக் கொல்லுதலும் உண்மை பொய் ஏமாற்றம் நியாயம் எப்போதும் வெளியில் சொல்ல முடியாத ஒரு பட்டியல் இருக்கிறது ஏம...