11 Jun 2017

டிரம்ப் வித்தியாசமானவர்


டிரம்ப் வித்தியாசமானவர்
            அமெரிக்க அதிபர் டிரம்பின் பேச்சுகள், செயல்பாடுகள் அனைத்தும் மிக எளிமையாக, வெளிப்படையாக இருக்கின்றன. அமெரிக்காவின் சுயநலத்தை அவர் பட்டவர்த்தனமாகப் போட்டு உடைக்கிறார்.
            இதுவரை இருந்த மற்ற அமெரிக்க அதிபர்கள் அமெரிக்காவின் சுயநலத்தைச் சாதுர்யமாக உலக நலம் என்ற வார்த்தையில் மறைப்பார்கள். டிரம்பிடம் இதுபோன்ற வார்த்தை மறைப்புகள் இல்லை.
            சுற்றுச்சூழல் தொடர்பான பாரீஸ் ஒப்பந்தத்துக்கு நேரடியாக மறுப்பு ("நோ")சொல்லி விட்டார். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் அரசியல்வாதிகள் மத்தியில் டிரம்ப் வித்தியாசமானவர்தான். இதற்காக அவர் அரசியல் முதிர்ச்சியற்றவர் என்பது போல கூட விமர்சிக்கப்படலாம்.
            அமைதிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து விட்டு போருக்கான ஒத்திகை பார்ப்பதை போல் இல்லாமலும், ஒப்பந்தத்தை மதிப்பது போல மதித்து காலில் போட்டு மிதிப்பது போல் இல்லாமலும், தன்னுடைய முடிவு இதுதான் என்பதை பொட்டில் அடித்தாற் போல் டிரம்ப் சொல்வது பரவாயில்லை. ஒபாமா இதை வேறு விதமாகக் கையாண்டு இருப்பார். அது எப்படி என்று உங்களுக்கே தெரியும், நான் சொல்ல வேண்டியதில்லை.
*****

No comments:

Post a Comment

கதை எழுதுதலும் ஆத்மாவைக் கொல்லுதலும்

கதை எழுதுதலும் ஆத்மாவைக் கொல்லுதலும் உண்மை பொய் ஏமாற்றம் நியாயம் எப்போதும் வெளியில் சொல்ல முடியாத ஒரு பட்டியல் இருக்கிறது ஏம...