2 Jun 2017

கடவுளின் சிரிப்பு


கடவுளின் சிரிப்பு
சிறுத்த மார்பகம்
பெருத்த மார்பகமாய் வேண்டும் என ஒருத்தியும்
மார்பு பெருத்த ஒருத்தி
சிறுத்த மார்பகம் வேண்டும் என்றும்
ஒரே வாசல் வழி
ஒரு ப்யூட்டி பார்லருக்குள் நுழைந்ததும்
இருவர் விருப்பத்தையும்
நிறைவேற்றுவதாகச் சொன்ன
ப்யூட்டி பார்லர் ஊழியரைப் பார்த்து
சுவரில் தொங்கிக் கொண்டிருந்த
கடவுள் சிரித்தார்
இருவர் விருப்பத்தையும்
அவரவர் விருப்பத்திற்கேற்ப
இவளுக்கு உள்ளதை அவளுக்கும்
அவளுக்கு உள்ளதை இவளுக்கும்
மாற்றி வைக்க முடியாத
தன் இயலாமையை நினைத்தபடி.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...