2 Jun 2017

மனஅழுத்தத்தைக் குறைப்பது எப்படி? ரெடி 1,2,3 ஸ்டார்ட்!


மனஅழுத்தத்தைக் குறைப்பது எப்படி? ரெடி 1,2,3 ஸ்டார்ட்!
            பகிர்ந்து கொள்ளும் இன்பம் இரட்டிப்பாகிறது,
            பகிர்ந்து கொள்ளும் துன்பம் பாதியாகிறது என்பார்கள்.
துன்பம் என்பது மனஅழுத்தத்தின் குறியீடு. அது மனதில்தான் இருக்கிறது வெளியில் இல்லை. பகிர்ந்து கொள்ளும் போது அது மனதைக் கடந்து ஓடி விட்டால் மனஅழுத்தம் வெளியேறி விடும்.
பொதுவாக பகிர்ந்து கொள்ளுபவர்களுக்கு மனஅழுத்தம் இருப்பதில்லை. அவர்கள் உற்சாகமாக இருக்கிறார்கள். எதையும் நம்பிக்கையோடு அணுகுகிறார்கள்.
தைரியமாக ஒளிவு மறைவில்லாமல் தங்கள் எண்ணங்களையும், உணர்வுகளையும் பகிர்ந்து கொள்வதற்கான நட்புகளோ, உறவுகளோ கிடைக்கப் பெறாதவர்கள் ஒவ்வொரு நாளையும் மனஅழுத்தத்தோடு கடக்கிறார்கள். சாலை முழுதும் வேகத்தடைகள் இருந்து அதைக் கடந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஆகி விடுகிறது அவர்களது வாழ்வு.
பகிர்ந்து கொள்ள மனிதர்கள் கிடைக்காமல் நாய்களிடமும், பூனைகளிடமும் அடைக்கலாமாகி அதை வளர்த்து அதோடு சிநேகமாகி விடுபவர்கள் நிறைய. அப்படிப்பட்டவர்கள் மனிதர்களுக்குத் தரும் முக்கியதுவத்தை விட நாய்களுக்கும், பூனைகளுக்கும் தரும் முக்கியத்துவம் அதிகமாக இருக்கும்.
நாய்களையும், பூனைகளையும் வளர்க்க அருவருப்புப் படுபவர்கள் மரங்களை வளர்க்கலாம். ஒவ்வொரு மரமும் நான் எதைச் சொன்னாலும் தலையாட்டும். எதைப் பகிர்ந்து கொண்டாலும் மறுபேச்சு பேசாமல் கவனித்துக் கொண்டிருக்கும். மரங்கள் ஞானத்தின் வடிவங்கள். புத்தர் ஞானம் பெற்றது கூட போதி மரத்தின் அடியில்தானே.
*****

No comments:

Post a Comment

கனா காணும் தூக்கங்கள்!

கனா காணும் தூக்கங்கள்! உனக்கான நேரம் வரும் அலாரம் அடிக்கும் அதுவரை தூங்கிக் கொண்டிரு உனக்கான கனவுகளைக் கண்டு கொண்டிரு ஏ அழகான விதை...