1 Jun 2017

ஒரு பொது அறிவுக்குத்தான்!


ஒரு பொது அறிவுக்குத்தான்!
            "தலைவரே! வேற எதாச்சும் பார்க்குறீங்களா?" என்றார் கட்சித் தலைவராகப் பதவியேற்ற சமத்து சம்புலிங்கத்திடம் அவரது உதவியாளர்.
            "எல்லா சி.பி.ஐ. ஆபிஸர்ஸ் போட்டோவையும் ஒரு தடவை பார்த்திட்டா வசதியாக இருக்கும்!" என்றார் சம்புலிங்கம்.
            "சி.பி.ஐ.ன்னா கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியான்னு சொல்வாங்களே கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களோட போட்டோவைக் கேட்குறீங்களா?" என்றார் உதவியாளர்.
            "ரெய்டெல்லாம் பண்ணுவாங்கல்ல அந்த சி.பி.ஐ. ஆபிஸர்ஸைச் சொன்னேன்!"
            "அதை எதுக்குத் தலைவரே சம்பந்தம் இல்லாம கேட்குறீங்க?" புரியாமல் தலையைச் சொரிந்து கொண்டு நின்றார் உதவியாளர்.
            "ஒரு பொது அறிவுக்குத்தான்னு உங்கிட்ட பொய் சொல்ல விரும்பல. கட்சித் தலைவரா ஆயிட்டேன்ல. அதனால எப்படியும் ரெய்டு வருவாங்க. வர்றப்ப நல்ல இன்ட்ரோ கொடுத்து இன்ட்ரடியூஸ் பண்ணிக்கலாம் பாரு, அதுக்குத்தான்!" என்றார் சமத்தாக சம்புலிங்கம்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...