தேவை எய்ம்ஸ் மருத்துவமனையா? நல்ல Aimsஆ?
நமக்கு டில்லி என்றால் ஒரு கவர்ச்சி இருக்கிறது.
நம் ஊர் என்றால் ஒரு தாழ்வுணர்ச்சி இருக்கிறது.
டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில்
அமைக்காவிடில் ராஜினாமா செய்யப் போவதாக அம்மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள்.
இந்த எச்சரிக்கையையும், மக்களுக்கான நலத்திட்டங்களைப் பெற்றுக் காட்டுவதில் ஆர்வம்
காட்டுதாகக் காட்டும் அவர்களின் உணர்ச்சியையும் பின்வருவனவற்றில் காட்டலாம்.
நம் ஊர் மருத்துவமனைகளை நல்ல தரத்தில்
அமைக்கலாம். அவைகளை மேம்படுத்தலாம். போதிய எண்ணிக்கையில் மருத்துவர்களை நியமிக்கலாம்.
சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி என அனைத்து வகை மருத்துவர்களை ஆரம்ப சுகாதார
மருத்துவ நிலையங்கள் வரை நியமிக்கலாம். ஆங்கில மருத்துவத்தில் மட்டுமல்லாது மாற்று
மருத்துவத்திலும் மருத்துவம் செய்து கொள்ளலாம் என்ற விழிப்புணர்வையும், நம்பிக்கையையும்
மக்களிடம் உருவாக்கலாம்.
முக்கியமாக நோய் என்பதே சுகாதாரக் குறைவாலும்,
ஊட்டச்சத்துக் குறைவாலும், ரசாயன உணவு உற்பத்தியாலும்தான் ஏற்படுகிறது என்பதை உணர்ந்து
அதற்கேற்ற திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தலாம்.
இதையெல்லாம் விட்டு விட்டு மாவட்டத்துக்கு
மாவட்டம் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி நாட்டில் நிறைய நோயாளிகளை உருவாக்குவோம் என்று
எம்.எல்.ஏ.க்கள் கங்கணம் கட்டிக் கொண்டு அலைவது அவர்களின் அடையாள அரசியலுக்கு உதவலாம்.
நலமான, வளமான ஒரு நாட்டை உருவாக்குவதற்கு உதவாது.
*****
No comments:
Post a Comment