18 Jun 2017

30,000 பார்வைகளைக் கடந்து இருக்கிறோம்...


30,000 (முப்பதாயிரம்) பார்வைகளைக் கடந்து இருக்கிறோம்...
நன்றி அன்பர்களே!
            நிறைய எழுத்துகளைப் படித்திருப்பீர்கள். இது ஒரு வித்தியாசமான எழுத்துதான்.
            இதில் இசங்கள் இல்லை. இதில் எந்த புதிய முறைகளையும் பரிசோதித்துப் பார்த்தல் இல்லை.
            பழைய முறைகள் என்று ஒன்று இருந்தால்தானே புதிய முறைகளைப் பரிசோதித்துப் பார்த்தல் வேண்டும். முறைகள் என்பதே முட்டாள்தனங்கள் என்பதை நீங்கள் விரைவில் புரிந்து கொள்வீர்கள்.
            உங்கள் மனது இப்போது எப்படி இருக்கிறதோ, அப்படித்தான் இருக்கும் இந்த எழுத்துகள். இயல்பாக, வெகு இயல்பாக.
            ஒருவேளை இந்த எழுத்துகள் கடினமாக இருப்பதாக நீங்கள் நினைத்தால், உங்களுக்கு அந்த சம்மட்டி அடி தேவை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஆம்! நீங்கள் எளிமையாக இல்லை என்பது அதன் பொருள்.
            மேக்கப் இல்லாமல் நான் கண்ணாடி பார்க்க மாட்டேன் என்பவர்களுக்கு இந்த எழுத்துகள் ஏமாற்றமாக இருக்கலாம். ஏமாந்து பார்ப்பதுதான் சுகம்.
            நீங்கள் மேக்கப்பின் உதவியால் அழகாக இருப்பதாக நம்பிக் கொண்டிருந்தீர்கள். இப்போது ஏமாந்து விட்டீர்கள். உண்மையை கண்டு விட்டீர்கள். இதை விட அழகு என்ன இருக்கிறது? இதை விட சுகம் என்ன இருக்கிறது?
            இந்த எழுத்துகளில் எதுவும் இல்லை. இருக்கப் போவதும் இல்லை. இருந்ததும் இல்லை.
            இது வெறும் எழுத்து மட்டுமே. நீங்கள் அர்த்தத்தைத் தர முனைந்தால், உங்கள் மனதால் நீங்கள் மறுபடியும் பூட்டிக் கொள்ள ஆரம்பித்து விட்டீர்கள்.
            ஒரு விசயம் சொல்ல வேண்டுமென்றால், இந்த எழுத்துகள் வழி நீங்கள் இதை படிக்க இயலாது. படிப்பதற்கு இந்த எழுத்துகள் ஒரு வழி அவ்வளவே.
            நீங்கள் நிறைய படிக்க பிரியப்படலாம். படியுங்கள். ஒன்றுமில்லை என்பதை அப்போது புரிந்து கொள்வீர்கள்.
            இந்த எழுத்துகள் மூலம் நான் எதுவும் சொல்லவில்லை. அப்படி எதாவது சொன்னதாகத் தெரிந்தால் தயவுசெய்து எனக்கு எழுதுங்கள்.
            அப்படி ஒன்றும் சொல்லவில்லை என்று பதில் எழுதுகிறேன்.
            எவ்வளவோ படித்துக் களைத்துப் போனவர்களே! இதைப் படியுங்கள். களைத்துப் போக மாட்டீர்கள்!
            எழுத்துகளின் வேலை களைத்துப் போகச் செய்வது அல்ல. கலைத்துப் போடுவது!
            உங்களுக்குப் புதிய ஒரு எழுத்து கிடைத்து விட்டது.
*****

No comments:

Post a Comment

ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்!

ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்! மனித மனதின் பூடகம் புரிந்து கொள்ள முடியாதது. வெளித்தோற்றம் சில கண்ணோட்டங்களை மன...