24 May 2017

நின்னையே ராட்சசி என்று...


மலர்
காட்டில் மலர்ந்து
கொல்லையில் மலர்ந்து
மாடியில் உள்ள
தொட்டியில் மலரும்
அதே மணத்துடன் மலர்.
*****

நின்னையே ராட்சசி என்று...
ஒவ்வொரு பார்வையிலும் உன்னை
துளித்துளியில்
ருசித்துக் கொண்டு இருக்கும் என்னை
ஒரு பார்வையில்
விழுங்கப் பார்க்கிறாய்
நீ.
*****

கவரேஜ்கள்
சிசிடிவி கேமராக்கள் நிறைந்த
திருமண மண்டபத்தில்
பனிரெண்டு பேர் செய்து கொண்டிருந்தார்கள்
வீடியோ கவரேஜூம்.
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...