24 May 2017

வீதியில் இறங்கு!


முடிவு
            ஒரு ரூபாயிலிருந்த ஒரு குட நீரின் விலை பத்து ரூபாய் ஆன பிறகு, சொட்டிக் கொண்டு வரும் ஓட்டையை அடைப்பதென முடிவு செய்தான் தண்ணீர் லாரி முருகேசன்.
*****
வீதியில் இறங்கு!
            நான்கு டாஸ்மாக்குகளை மூடி, கடைசியாக இருந்த ஐந்தாவது டாஸ்மாக்கையும் மூட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த போது வீதியில் இறங்கிப் போராடுவது என முடிவெடுத்தனர் அந்த ஏரியா குடிமகன்கள்.
*****
காலி
            கருவேல மர அழிப்பில் மும்மரமாக ஈடுபட்டு வீடு திரும்பிய கணவனிடம் மனைவி சொன்னாள், "சிலிண்டர் காலியாச்சு!"
*****

No comments:

Post a Comment

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா?

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா? பழங்களையல்ல வேர்களைக் கவனியுங்கள் பழங்கள் கண்ணுக்குத் தெரிகின்றன வேர்கள் மறைந்திருக்கின்றன பழ...