24 May 2017

நெடுங்காட்சி


நெடுங்காட்சி
அழுது கொண்டே
பார்த்துக் கொண்டே இருக்கும்
அம்மாவை
அழாமல் பார்த்துக் கொண்டு இருக்கிறது
குழந்தை.
விளம்பர இடைவேளை என்று தெரிந்தும்
மெல்லக் குரலெடுத்து
அழத் தொடங்குகிறது.
தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு
மெகா சீரியலிலிருந்து
விலக்கியக் கண்ணெடுத்து
பால் பாட்டிலை
ஊட்டுவிக்கத் தொடங்குகிறாள் அம்மா.
*****

டிஜிட்டல் டீன்
"ஸ்மைல் ப்ளீஸ்!" என்ற
புகைப்படக்காரரை
வித்தியாசமாகப் பார்த்தான்
அதற்கு முன்
செல்பி எடுத்துக் கொண்ட
டிஜிட்டல் டீன்.
*****

No comments:

Post a Comment

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா?

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா? பழங்களையல்ல வேர்களைக் கவனியுங்கள் பழங்கள் கண்ணுக்குத் தெரிகின்றன வேர்கள் மறைந்திருக்கின்றன பழ...