3 May 2017

கடைசி ஆசை


கடைசி ஆசை
எப்படியும் விற்கத்தான் போகிறோம்
என்பது தெரிந்தும்
"விலை கம்மியா கேட்டாலும்
பரவாயில்ல
விவசாயம் பண்ணணும்னு கேட்குற
பரமசிவத்துக்கே
பத்து ஏக்கரா
தெக்குக் காட்டையும் கொடுத்திடுங்க!"
என்ற கடைசி ஆசையோடு
கண் மூடினார் அப்பா.
*****

கூட்டணி
செய்திச் சேனல் பிடிக்காமல்
பேப்பர் படிக்கும் தாத்தா
பேரனுக்காக மட்டும்
அவ்வபோது சேர்ந்து கொள்கிறார்
போகோ சேனலில்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...