3 May 2017

ஒரு பொது அறிவிற்காக...


வேண்டல்
            "இந்த இடைத்தேர்தல் முடியற வரைக்கும் ரெண்டாயிரம் ரூபாய் நோட்டை தடை பண்ணிடக் கூடாது!" முருகனிடம் வேண்டிக் கொண்டார் தலைவர் தண்டபாணி.
*****
முன்னெச்சரிக்கை
            "ரொம்ப பணத்தைக் கொடுத்து இடைத்தேர்தல்ல ரத்து பண்ணிடற மாதிரி பண்ணிடாதீங்கடா!" ஏஜென்டுகளை எச்சரித்தார் புரோக்கர் பொன்னம்பலம்.
*****
ஒரு பொது அறிவிற்காக...
            "ஒரு தொகுதியிலேயே தொண்ணூறு கோடின்னா, நாடு முழுவதும் இடைத்தேர்தல் வெச்சா எவ்வளவு சிக்கும்?" தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி தகவல் கேட்டு படிவம் நிரப்பிக் கொண்டிருந்தான் ஏங்கல்ஸ் பாண்டி.
*****

No comments:

Post a Comment

நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்?

நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்? மீன்களுக்கு நாம் நீர் நிலைகளை அமைத்துத் தர வேண்டுமா? அல்லது, தட்டான்களும் வண்ணத்துப் பூச்சி...