22 May 2017

அழுகையின் வீரியங்கள்


அழுகையின் வீரியங்கள்
நல்ல குணம் வந்தால்
நாய் போல் அக்காவைச் சுற்றுவார்.
நாய்க் குணம் வந்தால்
குடித்து விட்டு
மாட்டை அடிப்பது போல்
அக்காவை அடிப்பார்.
மாட்டுக்கு சாணியள்ளி
குளிப்பாட்டி வைக்கோல் இடுவது போல
எடுத்து வைத்த வாந்தியைக் கழுவி
குளிப்பாட்டி போதை தெளிய
சுடச்சுட சோறிடுவாள் அத்தானுக்கு அக்கா.
அத்தான் அடித்த அடியில்
இடுப்பொடிந்து கிடந்த அக்காவைப்
பார்த்த போது
"செத்து தொலைய மாட்டேங்றானே மனுசன்!"
என்று அம்மா அழுத அழுகையில்
நிறைசூலியான அக்கா அழுது புலம்ப
மறுநாளே கொலையுண்டுப் போனார்
அத்தான்.
*****

No comments:

Post a Comment

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை!

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை! தற்காலத்தில் இலவசப் பரிந்துரைகள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் அதிகம் உலவுகின்றன. இலவசங்களுக்கும், இல...