21 May 2017

தவறிப் போன ஒன்று


தவறிப் போன ஒன்று
மயிலிறகுகள்
வளையல் துண்டுகள்
சாக்லேட் உறைகள்
உன் கைப்பட எழுதியவைகள்
தவற விட்ட கைக்குட்டைகள்
கூந்தல் உதிர்ந்த ரோஜாக்கள்
அனுப்பிய குறுஞ்செய்திகள்
பேஸ்புக் பதிவுகள்
எழுதிய கவிதைகள்
அத்தோடு
உன் இதயம்.
என் சேகரிப்பில்
தவறிப் போனது
நீ மட்டும்.
*****

மூடப்பட்ட தேநீர்க் கடை
சற்று முன் சாத்தப்பட்ட
தேநீர்க் கடையின் முன்
ஈக்கள் மொய்த்துக் கொண்டு
இருக்கின்றன
இரத்தம் உறைய
இறந்து கிடப்பவன் உடல் எங்கும்.
*****

No comments:

Post a Comment

சமநிலைச் சாத்தியங்கள் அசாத்தியங்களா?

சமநிலைச் சாத்தியங்கள்! ஒரு சமநிலையை உருவாக்குவதற்கு என்ன செய்ய வேண்டும்? ஏழைகளைப் பணக்காரர்களாக்க வேண்டுமா? பணக்காரர்களை ஏழைகளாக்க வேண...