20 May 2017

ஒற்றைப் பதிலில் அடங்கும் வறட்டுத்தனம்


ஒற்றைப் பதிலில் அடங்கும் வறட்டுத்தனம்
            சில நிகழ்வுகள் ஆச்சர்யத்தைத் தருகிறது.
            இலவசக் கல்வியை விலை கொடுத்து வாங்குகிறார்கள்.
            இலவச மருத்துவத்தை லட்சங்களில் கொட்டிச் செய்து கொள்கிறார்கள்.
            இலவச அரிசியை கோழிகளுக்கு வாங்கிப் போடுகிறார்கள்.
            சிலிண்டர் மானியத்தை வாங்கிக் கொண்டு கூடுதல் வரி செலுத்துகிறார்கள்.
            பேரம் பேசுபவர்கள் பிராண்டட் ஷர்ட் என்றால் கேட்டதை அள்ளிக் கொடுக்கிறார்கள்.
            சுத்தமும் சுகாதாரமும் கொண்ட கிராமத்தை விட்டு விட்டு நகரத்திற்குச் சென்று அசுத்தமாக இருக்கிறது அங்கலாய்த்துக் கொள்கிறார்கள்.
            கேன்சர் வரும் என்பதை அட்டைப் பெட்டியில் பார்த்தும் சிகரெட்டை ஊதித் தள்ளுகிறார்கள்.
            குடி குடியைக் கெடுக்கிறது என்பது தெரிந்தே குடிக்கிறார்கள்.
            காரணம் பழகி விட்டோம் என்கிறார்கள். தங்கள் பேராசைகளையும், சுயநலத்தையும், வறட்டுத்தனங்களையும் அந்த ஒற்றைப் பதிலில் அடக்கி விடுகிறார்கள்.
*****

No comments:

Post a Comment

ஒரு நேரத்தில் ஒன்று!

ஒரு நேரத்தில் ஒன்று! ஒரு நேரத்தில் ஒரு விசயம் ஒரு நேரத்தில் ஒரு தாவல் ஒரு நேரத்தில் ஒரு நிலை ஒரு நேரத்தில் ஒரு படி ஒரு நேரத்தில் ஒ...