21 May 2017

நோ ப்ராப்ளம்!


நோ ப்ராப்ளம்!
            "இனிமே ஹவுஸ் ஓனர் பிரச்சனை கிடையாது!" என்றாள் சொந்த வீட்டோடு சேர்த்து மாடியில் இரண்டு வாடகை வீட்டையும் கட்டிய மகிழ்ச்சியில் தனலெட்சுமி.
*****
சோதனை
            "எல்லாம் நார்மலத்தான் தெரியுது. இருந்தாலும் இந்த டெஸ்டுகளை எல்லாம் எடுத்திடுங்க!" டாக்டர் கொடுத்த சீட்டில் ஒன்பது டெஸ்டுகள் இருந்தன.
*****
பெருமிதம்
            "எனக்கும் சுகர்தான்!" எதிர் வீட்டு அலமேலு மாத்திரை போடும் அதே நேரத்தில் தானும் மாத்திரையை எடுத்து பெருமிதமாக வாயில் போட்டுக் கொண்டாள் ஆண்டாள்.
*****

No comments:

Post a Comment

சமநிலைச் சாத்தியங்கள் அசாத்தியங்களா?

சமநிலைச் சாத்தியங்கள்! ஒரு சமநிலையை உருவாக்குவதற்கு என்ன செய்ய வேண்டும்? ஏழைகளைப் பணக்காரர்களாக்க வேண்டுமா? பணக்காரர்களை ஏழைகளாக்க வேண...