10 May 2017

காலக் கணக்குகள்


காலக் கணக்குகள்
என் குழந்தை
அரசு மருத்துவமனையில்தான்
பிறக்க வேண்டும் என்றவள்
வீட்டிலே பிரசவித்து விட்டாள்.
என் குழந்தை
தனியார் மருத்துவமனையில்தான்
பிறக்க வேண்டும் என்றவள்
பிரசவ வலிக்கு முன்னே
நாள் நட்சத்திரம் பார்த்து
வயிற்றைக் கீறச் செய்து
குழந்தையை எடுத்துக் கொண்டு
வந்து விட்டாள்.
பின்னொரு காலத்தில்
வீட்டிலே பிறந்த குழந்தை
ஒரு தனியார் மருத்துவமனையைக்
கட்டக் கூடும்.
தனியார் மருத்துவமனையில்
பிறந்த குழந்தை
அரசு மருத்துவமனையில்
வைத்தியம் பார்த்துக் கொள்ளவும் கூடும்.
*****

1 comment: