22 May 2017

பஞ்ச்(ம்) நெருப்பு(ம்)


அன்பின் நேரம்
            அவன் கேட்டதையெல்லாம் பேரம் பேசி வாங்கிக் கொடுத்த அவன், மல்லிப்பூவுக்கு மட்டும் பேரம் பேசாமல் வாங்கிச் சூட்டி விட்டான்.
*****
கணக்கு
            வேட்பாளர் சொத்துக் கணக்கில் காட்டியதை விட அதிகமாக தேர்தலுக்காக செலவழித்துக் கொண்டிருந்தார் அறிவழகன்.
*****
ஜீரோவின் ஹீரோ
            "ஆயிரம் கோடிக்கு எத்தனை ஜீரோன்னு இப்பக் கூட தெரியாது!" சத்தியம் செய்யாத குறையாகச் சொன்னார் அதை விட அதிகமாக சொத்து சேர்த்ததாக கிசுகிசுக்கப்பட்ட எம்.எல்.ஏ. அருள்பாண்டி.
*****
பஞ்ச்(ம்) நெருப்பு(ம்)
            "என்னை கைது பண்ணா தமிழ்நாடே பத்திகிட்டு எரியும்!" தலைவர் சவால் விட, வெயில் தாங்க முடியாத தொண்டர்கள் தெறித்து ஓடினர்.
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...