22 May 2017

குடியும் குடி சார்ந்த இடமும்


குடியும் குடி சார்ந்த இடமும்
            தமிழ் நிலத்தை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்தாகப் பகுத்து, ஐந்நிலங்களுக்கும் உரிய உரிப்பொருளை வகுத்தது தமிழ் வாழ்வியல்.
            குறிஞ்சி என்றால் புணர்தலும் புணர்தல் நிமித்தமும்.
            முல்லை என்றால் இருத்தலும் இருத்தல் நிமித்தமும்.
            மருதம் என்றால் ஊடலும் ஊடல் நிமித்தமும்.
            நெய்தல் என்றால் இரங்கலும் இரங்கல் நிமித்தமும்.
            பாலை என்றால் பிரிதலும் பிரிதல் நிமித்ததும்.
காலக்கொடுமை இன்று ஐந்து நிலங்களுக்கும் ஒரே உரிப்பொருள்தான் எஞ்சி நிற்கிறது, குடியும் குடியும் நிமித்தமும் என்று.
            டாஸ்மாக் போராட்டம் நடக்காத தமிழ்நாட்டு ஊர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
            இரட்டை அர்த்த வசனங்களும், குடியும் இல்லாத திரைப்படங்களை பார்ப்பது அரிதாகி விட்டது.
            குடிதழீஇ கோலோச்சு மாநில மன்னவன்
            அடிதழீஇ நிற்கும் உலகு
                                                என்ற வள்ளுவர் வாக்கில் குடி தழீஇ என்பதை டாஸ்மாக் குடி தழீஇ என்று புரிந்து கொண்ட அவலத்தை என்ன சொல்ல?
            குடிகாரர்கள் அடிதழீஇ நிற்கும் தமிழ்நாட்டில் எதுவும் நடக்கும். அவர்களின் ஆதரவு அமோகமாக இருக்கிறது. அந்த அமோகத்தில் அவர்களின் வாக்குகளும் இருக்கிறது என்பதுதான் சிக்கலே.
            வேண்டுமானால் ஒன்று செய்தால் பார்க்கலாம், குடிகாரர்களின் வாக்கைச் செல்லாதது என்று அறிவித்துப் பார்க்கலாம்.
            நல்லாட்சி மலர்வதற்கு அப்படி ஒரு வாய்ப்பு இருக்குமானால் அதை பரிசீலித்துப் பார்ப்பதில் தவறென்ன இருக்க முடியும்?
*****

No comments:

Post a Comment

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்!

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்! மோசடி பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. மோசடி பேர...