25 May 2017

பிள்ளைகளை எந்தப் பள்ளியில் சேர்ப்பது?


பிள்ளைகளை எந்தப் பள்ளியில் சேர்ப்பது?
            எந்தப் பள்ளியில் குழந்தைகளைச் சேர்ப்பது?
            தனியார் பள்ளியிலா? அரசுப் பள்ளியிலா?
            பணமிருந்தால் தனியார் பள்ளி. இல்லாவிட்டால் அரசுப் பள்ளி என்று இதற்கு ஒரு அமைப்பு முறை இருக்கிறது.
            பெரும்பாலான அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைளே தனியார் பள்ளியில்தான் படிக்கின்றன. நாமக்கலில் இருக்கும் பள்ளிகளும், இன்னும் மாவட்டந்தோறும் இருக்கும் ரெசிடன்சியல் பள்ளிகள் செழிப்பதற்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பிரதான காரணம். அவர்களின் குழந்தைகள் அங்குதான் படிக்கின்றன. தவிரவும் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர் மற்ற சக அரசுப் பள்ளி ஆசிரியர்களை அது மாதிரியான பள்ளிகளில் சேர்க்க ஆற்றுப்படுத்தும் ஆற்றுப்படை இருக்கிறதே அதை வைத்து தமிழில் இன்னொரு ஆற்றுப்படை எழுதலாம்.
            அண்மையில் நண்பர் மருதம் கோகி அவர்கள் அரசுப் பள்ளியின் சேர்க்கை அதிகரிக்க வேண்டும் என்கிறீர்கள் ஆனால் ஆசிரியர்களின் பிள்ளைகள் எங்கு படிக்கின்றன? என்ற ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறார்.
            அதற்கு பதில் சொன்ன ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர், "90 சதவீத ஆசிரியர்களின் பிள்ளைகள் அரசுப் பள்ளியில்தான் படிக்கின்றன" என பதில் சொல்லியிருக்கிறார்.
            குட் ஜோக்!
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...