26 May 2017

ஆன்ட்ராய்டு புருஷன்


ஜென் இசட்
வியர்க்காமல் விறுவிறுக்காமல்
ஒர்க் அவுட் பண்ணி முடித்திருந்தான்
ஜிம் ஆப்ஸை.
*****

ஆன்ட்ராய்டு புருஷன்
படு தீவிரமாக பெண்ணியத்தைப் பற்றி
பேஸ்புக்கில் வினையாற்றி விட்டு
கீ பேட் செல்தானே வைத்துள்ளாள்
என்ற தைரியத்தில்
பொண்டாட்டியை ஓங்கி அடித்தான்
ஆன்ட்ராய்டு புருஷன்.
*****

ஷேர்
வாட்ஸ் அப்பில் மிரட்டி
தன் காதலன் அனுப்பியிருந்த
வீடியோவை
துணிந்து ஷேர் செய்தாள்
தற்கொலைக்கு முன்
வித்யா.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...