23 May 2017

நாற்சந்தியின் நிறம் சிவப்பு


பார்க்க நேரமில்லை
ஓங்கி அறைந்தான்
பையிலிருந்து நிதானமாக
கத்தியை எடுத்தான்
ஓங்கிக் குத்தினான்
கழுத்தை அறுக்க ஆரம்பித்தான்
உடல் துடிக்க ஆரம்பித்தது
அதற்கு மேல் பார்க்க நேரமில்லை
ரயில் வந்து விட்டதால்
அனைவரும் கிளம்பி விட்டோம்.
*****

நாற்சந்தியின் நிறம் சிவப்பு
பார்ப்பதற்கு திரைப்படப் படப்பிடிப்பு
போலிருந்த
நான்கு பேர் ஓடி வந்து
முன்னால் ஓடி வந்த
ஒருவனை சரமாரியாக வெட்ட
கிளியின் மூக்கை ஒத்த
பட்டுத் தெறித்த
ரத்தச் சிவப்பில்
அன்றிலிருந்து
அந்த இடத்தை மாற்றிக் கொண்டான்
கிளி ஜோசியக்காரன்.
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...