27 May 2017

காட்டைத் தின்ற ஏப்பம்


காட்டைத் தின்ற ஏப்பம்
காட்டைத் தின்ற மனிதனின் ஏப்பம்
ஒரு சிங்கத்தின் அழுகுரல் போல் இருக்கும்
காட்டுத்தீயின் புகை போல் இருக்கும்
மலரின் துர்நாற்றம் போல் இருக்கும்
பச்சிலைகளின் மரணம் போல் இருக்கும்
ஏப்பத்திற்கான ஒரு மாத்திரையை எடுத்துக் கொண்டு
கூடவே இன்னொரு மாத்திரையை எடுத்துக் கொண்டால்
பட்டாம்பூச்சிகள் பறக்கும்
வனாந்திரத்தை நாம் உருவாக்கிக் கொள்ளலாம்
நம் சைபர் சஞ்சார உலகில்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...