28 May 2017

3 நிகழ்வுகள்


3 நிகழ்வுகள்
ஒரு கருக்கலைப்பு
ஒரு பிரசவம்
ஒரு மாபெரும் கட்டிடத்தின்
இரு வேறு அறைகளில் நடக்கின்றன
கலைந்துப் போன கருவிற்காக
பிரசவத்தில் வெளிவந்த குழந்தை
வாய் விட்டு அழத் தொடங்குகிறது.
அவர்களுக்கான பில்லைத்
தயாரிப்பதில் கடமை உணர்வோடு
ஈடுபடத் தொடங்குகிறது மருத்துவமனை.
*****

கடவுள் வருவார்
உன் கடவுளுக்காக
நீ சண்டையிட வருகிறாய்.
என் கடவுளுக்காக
நான் சண்டையிட வருகிறேன்.
நம் இருவரையும் சமாதானப்படுத்த
எந்தக் கடவுளும் வரப் போவதில்லை.
*****

No comments:

Post a Comment

ஏன் இந்த மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போகிறது?

ஏன் இந்த மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போகிறது? பல நேரங்களில் மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போய் விடுகிறது. அப்படியானால், மாட்டுச் சமூகம...