20 May 2017

விடுபட்ட ஒரு வரி


விடுபட்ட ஒரு வரி
முடிவில் அந்த சாட்சியத்தில்
ஒரு வாக்கியம் விடுபட்டிருந்தது
கடைசியாக அவன் சாப்பிட்டது
போலீஸ் வாங்கிக் கொடுத்த பிரியாணி.
*****

பள்ளிக்குக் கிளம்புதல்
பாயில் விதி புரியாத
பிதாகரஸ் தேற்றம் பிடிக்காத
ஒளகாரக் குறுக்கமும் மகரக் குறுக்கமும் வெறுத்த
பஞ்ச சீலக் கொள்கைகளை மனதில் இருத்த முடியாத
மெமரி போயம் நெட்டுரு வசப்படாத
"பப்ளிக் எக்சாமிற்குப் படி! படி!" என்று
"தேர்ச்சி சதவீதம் குறைந்து விடுமோ?
அதிகாரிகளிடம் திட்டு வாங்க வேண்டுமோ?" என்ற
அச்சத்தில் சொன்ன -
வீட்டுக்கடனும், தனிநபர்க் கடனும் ஒருங்கே வாங்கி
வட்டிக்கு ஊழியஞ் செய்து கொண்டிருந்த ஆசிரியரைப்
பழி தீர்ப்பதென
மெய்ப்பொருள் நாயனார் அன்ன அவரை நோக்கி
புத்தகங்களுக்கு இடையே மறைத்த கத்தியோடு
பள்ளிக்குக் கிளம்பினான்
மனஇறுக்கம் மண்டிய மாணவன் ஒருவன்.
*****

No comments:

Post a Comment

ஒரு நேரத்தில் ஒன்று!

ஒரு நேரத்தில் ஒன்று! ஒரு நேரத்தில் ஒரு விசயம் ஒரு நேரத்தில் ஒரு தாவல் ஒரு நேரத்தில் ஒரு நிலை ஒரு நேரத்தில் ஒரு படி ஒரு நேரத்தில் ஒ...