4 May 2017

குலக்கல்வி


குலக்கல்வி
            அந்தப் பள்ளியில் ப்யூன் வராத அன்று அந்தப் பள்ளியில் படித்த அவர் மகன் டீ வாங்கச் சென்றான்.
*****
சான்று
            யு சான்றிதழ் பெற்ற அந்தப் படத்தில் நடந்தது போல அவ்வளவு பாலியல் தொல்லைகள் எதுவும் வரவில்லை, ஏ சான்றிதழ் பெறப் போகும் இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சாதனாவுக்கு.
*****
கஷ்டம்
            "கஷ்டப்பட்டதான்டா அதோட அருமை தெரியும்!" என்று அடித்த ஆசிரியருக்கு அவன் பட்டாசு தொழிற்சாலைக்கு பகுதி நேரமாய் வேலைக்குப் போகிறவன் என்ற செய்தி தெரியாது.
*****

No comments:

Post a Comment

குழு அமைக்கும் நேரம்!

குழு அமைக்கும் நேரம்! முடியும் என்றும் சொல்ல முடியாது முடியாது என்றும் சொல்ல முடியாது அப்போது அம்மா பிள்ளைகளிடம் சொல்வாள் “அப்பாவிடம...