4 May 2017

டி.வி.க்குப் பின்...


விதி
தண்ணீர் இருந்திருந்தாலோ அல்லது
மணலாக இருந்திருந்தாலோ தப்பித்திருப்பான்
பாலத்திலிருந்து தவறி
விழுந்தவன்.
*****


டி.வி.க்குப் பின்...
ராட்சச ராட்டினத்திலிருப்பவர்களைக்
காப்பாற்ற வரும் ஸ்பைடர் மேன்
நூறாவது மாடியில் பற்றிய தீயில்
சிக்கிக் கொண்டோரைக்
காப்பாற்ற வரும் சூப்பர் மேன்
இன்னும் இப்படியாக
ஹல்க், அயர்ன்மேன், பேட்மேன்
கதைகள் கேட்டு விட்டு
கடைசியில் கெஞ்சுகிறான் மகன்,
"அப்பா!
ஒரே ஒரு சோட்டா பீம் கதை சொல்லு!"
*****

No comments:

Post a Comment

குழு அமைக்கும் நேரம்!

குழு அமைக்கும் நேரம்! முடியும் என்றும் சொல்ல முடியாது முடியாது என்றும் சொல்ல முடியாது அப்போது அம்மா பிள்ளைகளிடம் சொல்வாள் “அப்பாவிடம...