4 May 2017

அதிசயம்


அதிசயம்
வீடுகள் மூழ்கி
நடந்த சாலை மேல்
படகில் மிதந்து
எங்கும் ஓடி தண்ணீருக்கு மத்தியில்
தாகத்தால் தவித்து
பாம்பும், முதலையும்
பயணித்து வந்த பசித்தப் பொழுதுகள் கடந்து
இன்று
ஆலங்கட்டி மழையைக் காண்கையில்
ரசிக்கிறாள் மகள்,
"அம்மா! மழை! மழை!
இப்படியே இது பேய்ஞ்சு
வீடெல்லாம் பனிக்கட்டியில மூழ்குனா
எப்படி இருக்கும்?"
*****


வலி
வலியைப் பொருட்படுத்தாமல்
மலையேறியவருக்கு
இறங்கி வந்த போது
நீங்கியிருந்தது முட்டி வலி.
*****

No comments:

Post a Comment

குழு அமைக்கும் நேரம்!

குழு அமைக்கும் நேரம்! முடியும் என்றும் சொல்ல முடியாது முடியாது என்றும் சொல்ல முடியாது அப்போது அம்மா பிள்ளைகளிடம் சொல்வாள் “அப்பாவிடம...