1 Jun 2017

சர்வர் பிராப்ளமும், ‍ஹோட்டலும்


சர்வர் பிராப்ளமும், ‍ஹோட்டலும்
            பேங்கில் இப்படி ஒரு அநாமதேயமான கூட்டத்தை சமத்து சம்புலிங்கம் கண்டதில்லை.
            ஒருநாளும் இல்லாத திருநாளா இதென்ன அதிசயம்? என்று இந்த திடீர் கூட்ட நெரிசல் குறித்து அருகில் நின்று கொண்டிருந்த ஒருவரிடம் ஒரு விசாரணையைப் போட்டார் சம்புலிங்கம்.
            "சர்வர் பிராப்ளமாம்! எந்த டிரான்ஸாக்ஸனும் பண்ண முடியலியாம்! அதான் எல்லாரும் கூட்டத்தோடு கூட்டமா சர்வர் பிராப்ளம் சரியாயிடும்னு காத்துகிட்டு இருக்காங்க!" என்று பதிலளித்தார் அருகில் இருந்தவர்.
            சம்புலிங்கத்துக்கு கோபம் கோபமாக வந்தது. வந்த கோபத்தை அடக்கிக் கொள்ள முடியாமல் அருகில் நின்ற அதே மனிதரிடம் கேட்டார், "சர்வர் பிராப்ளம்ங்றீங்களா? இது என்ன ஹோட்டலா?"
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...