1 Jun 2017

சீரணமாகாத அவநம்பிக்கை


சீரணமாகாத அவநம்பிக்கை
பிள்ளை வந்து அணைத்த போது
தப்பிக்கத்தான் நினைத்தாள்
மண்ணெண்ணெய்யை ஊற்றிக் கொண்டு
தீயை வைத்துக் கொண்டவள்.
யாரேனும் காப்பாற்ற வருவார்கள் என்ற
நம்பிக்கையோடு இருந்தவளுக்கு
குழந்தை எரிந்து உயிரற்று வீழும் வரை
யாரும் வரவில்லை என்ற போது
மற்றுமொரு முறை நம்பிக்கை இழந்தாள்
வேறு வழியின்றி
தீயின் ரணங்களோடும் வலிகளோடும்
குழந்தையைப் பறிகொடுத்த வேதனையோடும்
மருத்துவமனையின் படுக்கையில் போராடி
இருபத்து ஏழாம் நாள் உயிர் நீத்தாள்
வாழ்வின் அவநம்பிக்கையை
அவ்வளவு எளிதாக சீரணிக்க முடியாத அவள்.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...