1 Jun 2017

சுனிலின் கேள்வி


நன்றி
            திடீரென வந்த மழைக்கு நன்றி சொல்லிக் கொண்டனர் தண்ணீர் லாரிக்காக காத்திருந்த மக்கள்.
*****
சுனிலின் கேள்வி
            "பணம் இருக்கிற ஏ.டி.எம்.மையே பூட்டாத போது, எதுக்கு டாடி பணமே இல்லாத நம்ம வீட்டைப் பூட்டணும்?" என்றான் ஏ.டி.எம். வாட்ச்மேன் மகன் சுனில்.
*****
விரதம்
            "அபார்ட்மெண்ட்ல இருக்குற யாரோட பேசுறேன்னு நீ மாசம் ஒரு முறை மெளன விரதம் இருக்கிறே?" மனைவி கற்பகத்தின் விரதம் புரியாமல் கேட்டுக் கொண்டிருந்தார் குமார்.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...