1 Jun 2017

அதைத்தான் செய்வீர்கள்!


அதன் பின் பேசவில்லை
பாம்பின் வாய்க்குள்
போன தவளை
அதற்குப் பின் எதுவும் பேசவில்லை.
*****

அதைத்தான் செய்வீர்கள்!
அது துரதிர்ஷ்டத்தின்
மாபெரும் கல் என்று தெரியும்
அதை உங்களை நோக்கி
உருட்டி விடும் சாமர்த்தியம்
எனக்குத் தெரியும்
அதை உங்களுக்கான ஆபர் என்று சொல்வேன்
நீங்கள் நம்புவீர்கள்
நம்பித்தான் ஆக வேண்டும்
அதிர்ஷ்டத்தின் பிடியில் இருக்கும் நீங்கள்
பேரதிர்ஷ்டத்தைக் கனவு காண்பவர்களாகிய நீங்கள்
அதைத்தான் செய்வீர்கள்.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...