26 May 2017

போதை தெளிவிக்கும் பயம்


போதை தெளிவிக்கும் பயம்
கிராம சபைகளில் வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள்.
வேண்டாம் என்று கூக்குரல் கொடுத்து போராடிப் பார்க்கிறார்கள்.
மதுபாட்டில்களை போட்டு உடைத்தும் பார்க்கிறார்கள்.
டாஸ்மாக்கைத் திறக்கும் போதை சம்பந்தப்பட்டவர்களுக்கு விட்ட பாடில்லை.
குடிப்பவர்களுக்கு உண்டாகும் போதையை விட திறப்பவர்களுக்கான போதை அதிகம் போல.
நல்ல குடிமகன்களை உருவாக்க கடமைப்பட்டவர்கள் நல்ல குடிகாரர்களை உருவாக்குவதில் காட்டும் ஆர்வம் அடேங்கப்பா ரகம்.
போகிறப் போக்கைப் பார்த்தால் நாளை ஒரு வேளை நியாய விலைக் கடைகளில் அதை விற்கச் சொல்லி ஏற்பாடு செய்து விடுவார்களோ? என்ற பயம் விட்டபாடில்லை.
தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளே இல்லாத நிலை ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தையும் அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
*****

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...