27 May 2017

உணவுச் சங்கிலி


உணவுச் சங்கிலி
கானகம் தந்த கனிகள் வெம்பிப் போய்
காட்டை அழித்துக் கட்டிய
கட்டிடங்களின் பிராயச்சித்தமாய்
மீந்துப் போன உணவும்
நாறிப் போன எலியும்
அழுகிக் கிடக்கும் நாயும்
நடுரோட்டில் கொலையுண்டு கிடக்கும்
மனித உடலும்
பறவைகளின் உணவாய்க்
பின்வரும் காலமொன்றின் உணவுச் சங்கிலியாய்
அமையக் கூடும்.
கடவுள் எம்மை மன்னிப்பீராக.
*****

ஆர்டர்
சீக்கிரமாக ஓடிப் போய்
ஐந்து ரூபாய்க்கு பச்சை மிளகாய்
வாங்கி வருமாறு கேட்ட அம்மாவிடம்,
"ப்ளிப்கார்டில் ஆர்டர் போட முடியுமா?"
என்று கேட்டான்
வாட்ஸ் அப்பில் மேய்ந்து கொண்டிருந்த
மகன்.
*****

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...