25 May 2017

உதட்டின் அந்தக் கருப்புக் கோடு


உதட்டின் அந்தக் கருப்புக் கோடு
சிகரெட்டின்
எச்சரிக்கைப் படம்
உன்னை எதுவும்
செய்து விட முடியாது என்பது
நீ பிடிக்கும் சிகரெட்டில் தெரிகிறது.
எச்சரிக்கைகளைக் கண்டு பயப்படுவது
அந்தந்த கணத்தில் வாழ்பவர்களுக்கு
அழகில்லை என்று நீ
நினைத்திருக்கக் கூடும்.
உனக்குப் புரிவதற்கு வாய்ப்பில்லை
நீ இழுத்து விடும் புகையில்
உன்னை விட
உன் பிரியத்தைச் சுவாசிப்பவர்கள்
அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
நாம் என்ன செய்வது?
விசத்தை விற்கவும் ஆளிருக்கிறார்கள்
வாங்கவும் ஆளிருக்கிறார்கள்
எச்சரிக்கை என்பது
எச்சரிக்கையின்றி இருப்பது என்று
ஆகி விட்ட உலகில்.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...