3 May 2017

இரு கை ஐஸ்கிரீம்


இரு கை ஐஸ்கிரீம்
மதிய உணவு எடுத்த வராத நாட்களில்
பகிர்ந்து கொண்ட உணவின் அன்பில்
செமஸ்டர் பீஸ் கட்ட முடியாத பொழுதில்
கை விரல் மோதிரம் தந்து
கண்ணீர் மல்க வைத்த கடப்பாட்டில்
சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நாட்களில்
எடுத்து வந்து தந்த குறிப்புகளில்
பிறந்த நாளின் மூன்று நாள்களுக்கு முன்னதாக
யாருக்கும் தெரியாமல் எடுத்துத் தந்த
புத்தாடைப் பெருமிதத்தில்
தோழியே
இரு கைகளிலும் ஐஸ்கிரீம் கப்புகளோடு
பல்லால் பலூன் நூலைக்
கவ்விக் கொண்டு இருக்கும் குழந்தையைப் போல
உன்னிடம் எப்படிச் சொல்வது
என்று தெரியாமல் தவிக்கிறேன்
இந்தத் தோழமையை விட
காதல் பெரிதா சிறிதா என்று தெரியாமல்.
*****

முடிவு
நல்ல விலைக்கு
நெல்லை விற்க முடியாத விரக்தியில்
நல்ல விலைக்கு
விற்பதென முடிவு செய்தார் விவசாயி
நிலத்தை.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...