19 May 2017

ரெங்கநாதன் தெரு ரயில்


பெண் பார்த்தல்
கூலிப் படையில் அண்ணனைச்
சேர்த்து விட்டு
காவு வாங்கியவனே
கடைசியில் பெண் கேட்டு வந்து போக
கிடைத்த ஒரு பிடியை
பிடித்துக் கொள்வதா? விட்டு விடுவதா?
என்ற குழப்பம் அம்மைக்கும்,
கொலைக்கார பாவியோடு
குடும்பம் நடத்துவதா?
குடும்பத்தோடு கொலையாவதா?
என்ற குழப்பம் எனக்கும்
வாழ்வுக்கும், சாவுக்கும் இடையே
ஒரு கொலையை நிகழ்த்தி விட்டுச் சிரிக்கும்
சூழ்நிலைகள்.
*****

ரெங்கநாதன் தெரு ரயில்
ரங்கநாதன் தெருவில் வாங்கிய
ஜவுளிகளோடு
ரங்கநாதன் தெரு போன்ற
ரயில் பிடித்து
வீடு வரும் அண்ணன்களுக்காக
களை கட்டுகிறது
கடன்களை மத்தாப்பாய்ச் சிரிக்க விட்டு
ஏக்கங்களை பட்டாசாய் வெடிக்க விட்டு
வருடா வருடம் வந்துப் போகும்
தீபாவளி.
*****

No comments:

Post a Comment

ஜெலன்ஸ்கி செய்ய வேண்டியது என்ன?

ஜெலன்ஸ்கி செய்ய வேண்டியது என்ன? 1991 இல் சோவியத் ரஷ்யா சிதறுண்டது. சோவியத்திலிருந்து பல நாடுகள் பிரிந்து சுதந்தர நாடுகளாகின. அப்படிப் பிரி...