28 May 2017

லைக்ஸை வெறுத்தவன்


கனம்
ஒரு செல்பி எடுக்காமல்
திரும்பிய
இழவு வீட்டின் துக்கம்
ரொம்பவே
கனத்தது
பள்ளிப் பிள்ளைகளின்
புத்தகப் பையைப் போல.
*****

லைக்ஸை வெறுத்தவன்
அரிய தருணங்களை செல்பியாக்கி
பதிவிட்டு லைக்ஸை அள்ளுபவன்
ஏனோ தவற விட்டான்
முதியோர் இல்லத்தில்
தன் அம்மாவைச் சந்தித்த தருணத்தை.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...