25 May 2017

பைனல் டச்


பைனல் டச்
கூப்பிடும் இடத்திற்கு எல்லாம்
டேட்டிங் வந்தவன்
ஹனிமூன் என்று
விரும்பிய இடத்திற்கு எல்லாம்
அழைத்துச் சென்றவன்
கடைசியில் அலுத்துக் கொண்டான்
"டிவோர்ஸ் வாங்கணும்னா
கோர்ட்டுக்குத்தான் வரணுமா?"
*****

தொடர்பு
கதவைச் சாத்திக் கொண்டு
எல்லாரையும் தொடர்பு கொண்டான்
ஸ்கைப்பில்.
*****

கடவுள் செயல்
சாகும் தறுவாயில்
கடவுளைப் பார்ப்பதில்
பயனில்லை என்று
சொல்ல நினைத்தேன்.
அதற்குள் அவர் என்னை
தனக்குள் இழுத்துக் கொண்டார்.
*****

No comments:

Post a Comment

குழு அமைக்கும் நேரம்!

குழு அமைக்கும் நேரம்! முடியும் என்றும் சொல்ல முடியாது முடியாது என்றும் சொல்ல முடியாது அப்போது அம்மா பிள்ளைகளிடம் சொல்வாள் “அப்பாவிடம...