24 May 2017

நம் மேல் ஏறிச் செல்லும் பேருந்துகள்


நம் மேல் ஏறிச் செல்லும் பேருந்துகள்
            ‍பேருந்தில் ஏறி அமர்கிறோம்.
            சீட்டிலிருந்து ஒரு கம்பி ஆடையைக் கிழிக்கிறது.
            கோடை மழை கொட்டினால், மழையானது பேருந்தின் மேற்கூரை ஓட்டை வழியே கை தொட்டுப் பார்க்கிறது.
            குண்டும் குழியுமான சாலையில் மிகவும் குறைந்த வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் பேருந்திடம் நம்முடைய அவசரப் பயணத்தைப் பற்றி எதுவும் புலம்ப முடியாது. ஆங்காங்கே மறை கழன்று அடித்துக் கொண்டிருக்கும் பேருந்து தகடுகளின் சத்தம் நம் புலம்பலை விட அதிகமாக இருக்கும்.
            ஒவ்வொரு முறையும் பேருந்துக்காக காத்திருப்பதற்கென்று நிறைய நேரங்களை ஒதுக்கிக் கொள்ள வேண்டும். அது வருவதுதான் நேரம். அது கிளம்பும் போதுதான் கிளம்பும்.
            இவ்வளவு மோசமாக பேருந்துகளை வைத்திருக்கும் ஒரு நாட்டில் பேருந்துக்காகக் காத்திருக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகம். மக்களின் வாழ்க்கைத் தரத்தை அதை விட கீழாக வைத்து பேருந்துகளின் மீது எந்த வித விமர்சனமும் எழாமல் பார்த்துக் கொள்பவர்கள் இருக்கும் வரை இப்படிப்பட்ட பேருந்துகள் ஓடிக் கொண்டுதான் இருக்கும். அழுக்கு மூட்டையின் மூட்டைப் பூச்சிகளைப் போல் நம் பயணங்களும் இந்தப் பேருந்துகளில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும்.
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...