அது சங்க காலம்! இது எங்க காலம்!
அறிவுடை நம்பி என்ற மன்னனுக்கு
அறிவுரைச் சொல்லி பிசிராந்தையார்
பாடிய பாடல் ஒன்றுண்டு.
அவரே யான் கண்டனை இளையரும்
வேந்தனும்
என்று பிற்பாடு பாடியிருப்பார்
கொல்லோ.
இன்றோ அரசுக்கு அறிவுரைச்
சொல்லி
ஆயிரமாயிரம் பாடல்கள்
பேஸ்புக்கிலும், வாட்ஸ்
அப்பிலும்.
அதன்பின் யான் கண்டனை
வேந்தர்
என்று பாடியவர்தான் இலரே.
*****
அன்புடை நெஞ்சம்
நாம் பேஸ்புக் நண்பர்களும்
இல்லை
வாட்ஸ் அப்பில் தொடர்பு
கொண்டதும் இல்லை
டிவிட்டரில் பின்தொடர்ந்ததும்
இல்லை
யாயும் யாயும் யாராகியரோ
சாதிப் பார்த்து ஜாதகம்
பார்த்து
சாக்கடைப் பெயல் நீர்
போல் கலந்ததுவே
நம் அன்புடை நெஞ்சம்.
*****
No comments:
Post a Comment