6 May 2017

உயிரை வைத்தவன்


குட்டி ஆறுதல்
கணவனிடம் அடிபட்டு நொந்து
பிள்ளைகளுக்கு நூடுல்ஸ் செய்து கொடுத்து
இடியாப்பச் சிக்கலில் வாழ்பவளுக்கு
எங்கிருந்தோ ஆறுதலுக்காக
எப்படியோ அறிந்து
வந்து சேர்கின்றன
பூனைக்குட்டிகள்.
*****

உயிரை வைத்தவன்
"எதாவது தருவதாக இருந்தால்
நீ காதல் சொல்லும் போது
அதை மறுக்கும் சுதந்திரம் தா!
உன் காதலை அப்படியே
ஏற்க வேண்டும் என்ற
நிர்ப்பந்தத்தைச் சுமத்தாதே!"
என்று சொல்ல வாயெடுத்தவள்
அவன் கையில் இருந்த
கத்தியைப் பார்த்ததும் கேட்டாள்,
"நீதான் என் மீது உயிரையே வைத்தவனா?"
*****

No comments:

Post a Comment

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை!

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை! தற்காலத்தில் இலவசப் பரிந்துரைகள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் அதிகம் உலவுகின்றன. இலவசங்களுக்கும், இல...