23 May 2017

இரு புற வெட்டுகள்


இரு மாமாக்களின் கதை
காதலித்து கடைசியில்
தேவதாஸாய் ஆவான்
என கணிக்கப்பட்ட
முத்து மாமா
கடிமணம் புரிந்து கொண்டு செட்டிலானார்.
இவனுக்கெல்லாம் பெரியவங்க பார்த்துதான்
கல்யாணம் கட்டி வைக்கணும்
என கணிக்கப்பட்ட
மணி மாமா
ஒரு பெண்ணை இழுத்துக் கொண்டோடி செட்டிலானார்.
இருவரும் சந்திக்கும் போது
லவ் மேரேஜ் பெஸ்ட் என்று முத்து மாமாவும்,
அரேன்ஜ்ட் மேரேஜ் பெஸ்ட் என்று மணி மாமாவும்
பேசத் தவறுவதில்லை.
*****

இரு புற வெட்டுகள்
காய்கறியை அரிந்து கொண்டிருந்த அவளிடம்
பதற்றமாக ஓடி வந்த ஒருவன் சொன்னான்
அவளின் மகனை வெட்டியச் செய்தியை.
*****

No comments:

Post a Comment

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா?

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா? பழங்களையல்ல வேர்களைக் கவனியுங்கள் பழங்கள் கண்ணுக்குத் தெரிகின்றன வேர்கள் மறைந்திருக்கின்றன பழ...