26 May 2017

இயல்புப் புணர்ச்சி


இ நிக்கோடின்
சிகரெட் பிடிக்கிறதை விட்டுட்டேன்
என்ற அஸ்வின்
வாட்ஸ் அப்பிற்கு அடிக்சன் ஆகியிருந்தான்.
*****

இயல்புப் புணர்ச்சி
நமக்கென ஒரு வீடு இருந்தால்
நாம் ஏன் ப்ளாட்பாரத்தில்
புணரப் போகிறோம்?
நிற்க,
வீடுகளில் கொட்டில்கள்
இருக்கும் நாய்கள்
பாவம்,
நடுரோட்டில் புணர முடியாது.
*****

எச்சரிக்கை
"சும்மா இந்தப் பக்கம்
வந்துட்டுப் போகலாம்னு..."
என்று எதார்த்தமாகத்தான் சொல்கிறார்
கடன் கேட்கத்தான்
வந்திருக்க வேண்டும் என்று
எச்சரிக்கையாகிறது மனசு.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...