உறுதி செய்தல்
"ஓவர் மேக்கப்" என்று நண்பிகள்
சொன்னதை நம்பாமல் ஒரு செல்பி எடுத்துப் பார்த்துக் கொண்டாள் நர்மதா.
*****
பவர் கட்
"அடிக்கடி பவர் கட் ஆகுதுப்பா!"
என்றார் முன்னாள் மந்திரி. சுழல ஆரம்பித்தது மின் விசிறி.
*****
அதுதான் வழி
"ஞாயிறு மாலை 6 மணிக்கு புத்தம் புதிய
மெகா ஹிட் திரைப்படம்" அறிவிப்பைக் கேட்ட விமலா, விளம்பரத் தொல்லையின்றி அந்தத்
திரைப்படத்தைப் பார்க்க, அந்தப் படத்தின் டிவிடியை வாங்கி வரச் சொன்னாள் கணவனிடம்.
*****
No comments:
Post a Comment