2 May 2017

பெருமகனின் குடிக்கணக்கு


கிளைமேக்ஸ்
ஒரு மோசமான
கிளைமேக்ஸ்
ஆக்சிடென்ட்.
*****

பெருமகனின் குடிக்கணக்கு
செவ்வாய் வெள்ளியில்
வடை பாயசத்தோடு மூன்று கறி படைத்து
காக்கை உண்ட பின் விருந்துண்டு
திங்கள், புதன், வியாழன் மூன்று நாள்களும்
கீரையும், கிழங்கும், பருப்பும்
கொத்துமல்லி ரசத்தோடு உண்டு
சனிக்கிழமையில் மீனும், இறாலும், நண்டும்
ஞாயிற்றுக் கிழமையில் வெள்ளாட்டுக் கறியும்
பக்குவமாய் உண்டு
வைத்தியனுக்குக் கொடுப்பதை
வாணியனுக்குக் கொடு என
நல்லுடல் பேணிய பெருமகன்
இன்று அதிகமாகக் கொடுக்கிறான்
ப்ளாட் போடப்பட்ட வயல்கள் மத்தியில்
நான்கு வழிச் சாலையின் ரவுண்டானாவில்
இருக்கும் டாஸ்மாக் கடையின் கல்லாவுக்கு.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...