1 May 2017

அப்பா அம்மா


அப்பா அம்மா
அப்பா ஆசையோடு எதிர்பார்த்த
அண்ணா யுனிவர்சிட்டி இடம்
அவருக்குக் கொஞ்சமும் பிடிக்காத
தம்பிக்குக் கிடைத்து,
அவருக்குச் சுத்தமாகப் பிடிக்காத
க்ளார்க் வேலை
அவரது மறைவுக்குப் பின்
அவரின் செல்ல மகனான
எனக்குக் கிடைக்க
நிகழ்ந்த இரண்டிலும்
நிறைய மகிழ்ந்தது அம்மா மட்டுந்தான்.
*****

ஒன்றில்...
ஒரே நேரத்தில் நிகழும்
இரண்டு சாவுகளில்
ஒன்றில் தொடர்கிறது
ஒன்றில் விடுபடுகிறது
உறவும்...
நட்பும்...
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...