13 Apr 2017

என்றார்கள் அவர்கள்


டெலிவரி
ஆக்சிடென்ட் ஆன
டெலிவரி பாய்
ஆம்புலன்ஸில்.
*****

என்றார்கள் அவர்கள்
மயிலிறகு குட்டிப் போடாது என்றார்கள்
காக்காய் கடி கடித்துக் கொடுத்தால்
இன்பெக்சன் ஆகும் என்றார்கள்
மண்ணில் விளையாடினால்
புண் வரும் என்றார்கள்
ஓடி விளையாடினால்
அடிபடும் என்றார்கள்
மரம் ஏறினால்
கை கால் முறியும் என்றார்கள்
சுவரெல்லாம் வரைந்ததை
பேட் ஹேபிட் என்றார்கள்
அடங்கி ஒடுங்கி
ஓரமாய் அமர்ந்திருப்பதைப் பார்த்து
நல்ல பிள்ளை என்றார்கள்.
*****

No comments:

Post a Comment