25 Apr 2017

நினைப்புகள்


நினைப்புகள்
ஆடுகள் நினைத்துக் கொண்டன
அய்யனார் மட்டும் இல்லையென்றால்
அவருக்கு வெட்ட
யார் தங்களை
வளர்க்கப் போகிறார்கள் என்று.

பொதுசனம் நினைத்துக் கொண்டன
தேர்தல் மட்டும் இல்லையென்றால்
செலவு செய்யும் நினைப்பு
இந்த அரசியல்வாதிகளுக்கு
எங்கிருந்து வரப் போகிறது என்று.

வெகு தீவிரமாகப் படித்துக் கொண்டிருந்தவன்
நினைத்துக் கொண்டான்,
தான் மட்டும் இல்லையென்றால்
யாருக்குப் பரீட்சை நடத்தி
யாரைப் பெயிலாக்குவார்கள் என்று.

லஞ்சம் கொடுத்து வேலையில் சேர்ந்தவன்
நினைத்துக் கொண்டான்,
தான் மட்டும் இப்படி
லஞ்சம் கொடுத்து வேலையில்
சேரா விட்டால்
தனக்கு யார் லஞ்சம் கொடுப்பார்கள் என்று.
*****

No comments:

Post a Comment

நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்?

நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்? மீன்களுக்கு நாம் நீர் நிலைகளை அமைத்துத் தர வேண்டுமா? அல்லது, தட்டான்களும் வண்ணத்துப் பூச்சி...