25 Apr 2017

முட்டையா? கோழியா?


முட்டையா? கோழியா?
அந்தக் கோழியை
அடித்துச் சாப்பிடாதிருந்தால்
இன்று அது இடும்
முட்டையில் ஆம்லெட் சாப்பிட்டிருக்கலாம்.
அந்த முட்டையை
ஆம்லெட் இடாதிருந்தால்
முட்டை குஞ்சாகி
குஞ்சு கோழியாகி
கோழியைச் சாப்பிட்டிருக்கலாம்.
எதைச் சாப்பிடாமல் விடுவதாம்,
கோழிக்காக முட்டையையா?
முட்டைக்காகக் கோழியையா?
*****

பூச்சு
மகளின் சாம்பலை
அஸ்தியில் வைத்து
விபூதியை அள்ளிப் பூசிக் கொண்டார்
சாதி மாறி கல்யாணம்
செய்து கொண்டதற்காக
மகளை எரித்த
அப்பா அகோரசிவன்.
*****

No comments:

Post a Comment

நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்?

நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்? மீன்களுக்கு நாம் நீர் நிலைகளை அமைத்துத் தர வேண்டுமா? அல்லது, தட்டான்களும் வண்ணத்துப் பூச்சி...